போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக காரின் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்திக்க காரில் நடிகர் விஜய் சென்றபோது, அவரை பலரும் பின்தொடர்ந்தனர்.
அப்போது காரில் சென்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், விஜய் கார் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது பற்றி நெட்டிசன் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் உடனடியாக விஜய் பெயரில் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். விஜய் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.