Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு… செம Happy News… போடு ரகிட ரகிட…!!!

தமிழகத்தில் முதலிடத்தில் இருந்த பாகுபலி 2 படத்தின் சாதனையை விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். அந்தத் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது. அதன்பிறகு பல்வேறு இன்னல்களை சந்தித்து கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் இதுவரை அதிகம் வசூல் செய்த படமாக பாகுபலி-2 இருந்தது. ஆனால் தற்போது பாகுபலி 2 படத்தின் சாதனையை விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஊரடங்கு காலகட்டத்திலும் மாஸ்டர் இந்த சாதனையை படைத்தது விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

Categories

Tech |