சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு அது புரளி என தெரியவந்தது.மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்த நீலாங்கரை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.