நடிகர் வினய் பிரபல நடிகையை காதலித்து வருவதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் வினய். இதனையடுத்து வினை மோதிவிளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் துப்பரிவாளன் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். அவரது உயரத்திற்கும், தோற்றத்திற்கும் வில்லன் வேடம் செய்த காரணத்தினால் தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வினய்க்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 42 வயதாகும் நடிகர் வினய், 40 வயதாகும் நடிகை விமலா ராமனை காதலிக்கிறாராம். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஒன்றாக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக அந்த தகவலில் கூறியுள்ளனர். ஆனால் அவர்களின் திருமணம் குறித்த செய்தியை நடிகர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரும் இன்னும் உறுதியாக கூறவில்லை. நடிகை விமலா ராமன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தவர். கல்லூரி, குமரன், நேரம், ஓப்பம், ரோமியோ போன்ற மலையாள படங்களின் மூலமாக பிரபலமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து இருக்கிறார். நடிகை விமலா ராமன் தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய், இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.