அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரையுலகமே கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி மனதை கலங்க செய்தது. ஹீரோக்கள் ஜோக்கர்களாக அம்பலப்பட்டு நிற்கும் இந்த காலத்தில் சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் நாயகனாக உயர்ந்தவர். அவருக்கு என்னுடைய அஞ்சலி என்று ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.