Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்.. மரக்கன்றுகளுடன் மக்கள் அஞ்சலி.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமானதை தொடர்ந்து அவரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் மரக்கன்றுகள் ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல வருடங்களாக நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் விவேக், இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இதனைத்தொடர்ந்து இன்று காலையில் இருந்தே சினிமா பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன்பு நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மக்கள் பலர் தங்கள் கைகளில் மரக்கன்றுகளை ஏந்திச்சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். நடிகர் விவேக் அதிகமான மரக்கன்றுகள் நட வேண்டும் என்று விரும்பியவர்.

இதனை நிறைவேற்றும் வகையில் மக்கள் மரக்கன்றுகளை ஏந்தி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து விருகம்பாக்கத்திலிருந்து விவேக்கின் உடல் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |