Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கிற்கு மரியாதை…. மத்திய அரசு திட்டம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவன் மாரடைப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தவர். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கியவர் நடிகர் விவேக்.

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுபற்றி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விவேக் படம் போட்ட தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தபால் வெளியிடலாம் என தெரிகிறது.

Categories

Tech |