Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கை பற்றி அப்துல் கலாம் நன்முறையில் கூறிய செய்தி ..!!தகவலை வெளியிட்ட மகள் ..!!

நடிகர் விவேக்கை பற்றி முன்னாள் ஜனாதிபதியான அப்துல்கலாம் நன்முறையில் கூறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விவேக் முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் மீது பேரன்பு கொண்டு அவரின் அறிவுறுத்தலை ஏற்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு  உள்ளார். அவர் நடிகர் என்பதையும் தாண்டி சமூக சேவகராக பல நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்துள்ளார். அப்துல்கலாமின் மீது பேரன்பு கொண்ட நடிகர் விவேக் அவருடன் பலமுறை உரையாடியுள்ளார். இந்நிலையில் அப்துல்கலாமின் அண்ணன் மகளான நசீமா மரைக்கையார்  இது பற்றி கூறுகையில், ஒருமுறை தனது சித்தப்பாவான அப்துல் கலாம் நசீமாவிடம்  விவேக்கை தெரியுமா ?என்று கேட்டுள்ளார்.

அதற்கு நசீமா நன்றாகவே தெரியும் .அவரின் நகைச்சுவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.அதற்கு கலாம் அவர் நடிகர் மட்டுமல்ல சிறந்த சமூக ஆர்வலர்.அவரிடம்  நான்  மரக்கன்றுகளை நட வேண்டும் என்று மட்டும்தான் கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்று தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் என்று தெரிவித்ததாக நசீமா கூறியுள்ளார்.

Categories

Tech |