கமலுடன் நடிப்பது தனது ஆசை எனக்கூறிய விவேக் இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். தற்போது அவர் இறந்து விட்டதன் காரணமாக அந்தபடத்தில் இருந்து அக்காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் மிகச் சிறந்தவர். மரங்களின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் பல லட்சம் மரங்களை தமிழ்நாட்டில் நட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இவர் கமல்ஹாசனுடன் மட்டுமே நடிக்கவில்லை.
கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் தடித்து வந்ததன் மூலம் அவரது ஆசை நிறைவேற்றப்பட்டது. அப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நடிகர் விவேக் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அந்த படத்தில் இருந்து அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.