Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக் கூறிய நெஞ்சை உருக வைக்கும் வார்த்தை – RIP…!!!

அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் பதிவிட்ட கருத்து ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. எளிய தன்னலம் அற்ற தூய வாழ்வும் ஒருநாள் முடிந்து தான் போகிறது. எனினும் பலர் இறப்பர். சிலரே இறப்பிற்கு பின்னும் இருப்பர் என அவர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்தி அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |