முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனை முன்னிட்டு மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நடிகர் ஆர்யா என்ற செம்மொழிப் பூங்காவில் இரண்டு மரக்கன்றுகளை நட்டார்.
அதன் பிறகு பேட்டியளித்த அவர், அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள் அன்று நான் மரம் நடுவே நின்று மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஒவ்வொரு பிறந்த நாளன்றும் மரக்கன்று நட என் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் ஆர்யா மரக்கன்று நட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.