விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
The peppy first single of #ENEMY is out now. Check it out-#PATHALA (Tamil)- https://t.co/0RzVIsCf6s#PADATHE (Telugu)- https://t.co/UvywI5ucUR@VishalKOfficial @arya_offl @anandshank @vinod_offl @MusicThaman @SamCSmusic @RDRajasekar @shankaruppusamy @mirnaliniravi @divomovies pic.twitter.com/l2vdd7AH5m
— Vishal (@VishalKOfficial) August 21, 2021
சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் ‘எனிமி’ படத்தில் இடம்பெற்ற ‘பத்தல’ என்கிற அழகிய ரொமாண்டிக் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.