தமிழ் திரையரகில் முன்னணி ஆக்சன் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். 45 வயதை தொடும் அவர் மனதில் ஒரு சபதத்தை ஏற்றிருக்கின்றாராம். அதை செய்து முடித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வாராம் அதில் அவர் சந்தித்த காதல் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். நடிகர் சரத்குமாரின் மகளும் தென்னிந்திய நடிகை மான வரலட்சுமி நடிகர் விஷாலின் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவர்களும் சேர்ந்து பார்ட்டி போன்று கொண்டாட்டங்களில் ஒன்றாக தென்பட்டதால் தொடர்ச்சியாக இவர்கள் இருவர் பற்றி காதல் கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது. மீடியாக்களிலும் இது பற்றி கேட்டால் சிரித்துக் கொண்டே பதில் சொல்லாமல் இருவரும் கடந்து போய் விடுவார்களாம் தவிர மறுப்பு தெரிவித்தது இல்லையாம். இந்த சூழலில் நடிகர் சங்க தேர்தலின் போது விசால் அணி தங்களுடைய தேர்தலுக்கான பிரச்சார வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் தன்னுடைய எதிரணியை சேர்ந்த நடிகை சரத்குமார் அவர் மீது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். மேலும் அதிகார துருஷ்பிரயோகம் செய்து இருக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை விஷால் முன் வைத்துள்ளார்.
அந்த நேரத்தில் தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக இடத்தில் இருக்க வேண்டும் என வரலட்சுமி விரும்பியதால் இருவருக்கும் இடையே சின்ன விரிசல் ஏற்பட்டதாகவும் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருக்கலாம் என முடிவு செய்து பரஸ்பரம் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விஷால் தன்னுடைய அயோக்கிய திரைப்பட சூட்டிங் போதுதான் முதன் முதலில் ஹைதராபாத்தில் அனுஷாவை சந்தித்துள்ளார். அனுஷாவும் விஷாலிடம் தன்னுடைய மைக்கேல் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் இருந்த சிக்கலையும் அதற்கு தனக்கு உதவி செய்யும்படியும் கேட்டு இருக்கின்றார். அதன் பின் இவர்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது அது மெதுவாக காதலாக மாறியுள்ளது. இந்த சூழலில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி கடந்த 2019 ஆம் வருடம் மார்ச் மாதம் விஷால் மற்றும் அனுஷாவின் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமண தேதி அறிவிக்க போகிறார்கள் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த நேரத்தில் என்ன காரணம் என்று தெரியாமல் திருமணம் நடைபெறவில்லை. இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. அனுஷாவும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களை விசாலுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார். இந்த சமயம் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதும் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்டி முடிப்பேன் என உறுதி அளித்து இருந்தார் விஷால் சமீபத்தில் இந்த கட்டிடம் கட்டி முடித்த பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கட்டிட வேலைகள் மும்முறமாக நடந்து கொண்டிருக்கும் அதே சமயம் விஷாலின் பெண் தேடும் படலமும் தொடங்கி இருக்கிறது என தான் சொல்ல வேண்டும். விஷால் தன்னுடைய பேட்டி ஒன்றில் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கின்றேன். ஆனால் வீட்டில் நிச்சயிக்கப்படும் திருமணத்தில் அவ்வளவு பெரிதாக உடன்பாடு இல்லை காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போறேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.