நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் துப்பறிவாளன். இயக்குனர் மிஸ்கின் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. இதில் விஷால், பிரசன்னா, ரகுமான், கௌதமி உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் மிஸ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார் .
இதன்பின் கடந்த ஆண்டு துப்பறிவாளன்- 2 படத்தை தானே இயக்கப் போவதாக விஷால் அறிவித்தார் . ஆனால் இதன் பிறகு இந்த படம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை . இந்நிலையில் நடிகர் விஷால் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் துப்பறிவாளன்-2 படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளை எடுத்து முடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் .