விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படத்தின் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எப்.ஐ.ஆர் படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
My favourite track from the album..
Get ready for #Payanam – Full video song from #FIR drops on 17th July.
A @MusicAshwath musical, directed by @itsmanuanand. @VVStudioz pic.twitter.com/OOjLVRD1uF
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) July 14, 2021
மேலும் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எப்.ஐ.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘பயணம்’ என்ற வீடியோ பாடல் வருகிற ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .