Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரியை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகர் விஷ்ணு விஷால் தனது சகோதரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் விஷ்ணு விஷால் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |