நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான காடன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மோகன்தாஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
What an amazing actor and a great human being…❤️❤️
Its a wrap for @Indrajith_S sir in #Mohandas..
Thank you sir for being such a great co actor….
Second schedule coming to and end in few days ..
❤️❤️@VVStudioz@im_the_TWIST
@shravanthis111 @proyuvraaj pic.twitter.com/vSXXWsW2rk— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) April 16, 2021
விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மோகன்தாஸ் படத்தில் நடிகர் இந்திரஜித் சுகுமாரனின் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.