Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஸ்ரீகாந்த்தின் ‘எக்கோ’… மிரட்டலான டீஸர் ரிலீஸ்…!!!

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள எக்கோ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ள திரைப்படம் எக்கோ. சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட  இந்த படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி, திஷா பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று எக்கோ படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகியுள்ளது .

https://twitter.com/Act_Srikanth/status/1418556906034012160

இந்த டீசரிலிருந்து முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த வித்தியாசமான டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |