ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இதைத்தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது இவர் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ளார் .
Romantic melody #Neruppairuppan is the third release from #SivakumarinSabadham!
Releasing at 11 AM this Friday.@HipHopTamizha @TGThyagarajan @Sathyajothi_ #IndieRebels @it_is_madhuri #SivakumarinSabadham music on @thinkmusicindia pic.twitter.com/en0PI6NErK
— Ramesh Bala (@rameshlaus) July 28, 2021
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் மாதுரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற சிவகுமாரின் பொண்டாட்டி, பாகுபலிக்கு ஒரு கட்டப்பா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘நெருப்பா இருப்பான்’ என்கிற ரொமான்டிக் பாடல் வருகிற ஜூலை 30-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.