பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது மகள் சுஹானா. இவர் நெட்பிளிக்ஸ்க்காக உருவாகிவரும் ஆர்ச்சி காமிக் எனும் வெப் சீரியஸில் ஜோயா அக்தர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சுஹானா ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories