Categories
மாநில செய்திகள்

நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… இயக்குனர் கைது… பரபரப்பு…!!!

சென்னையில் நடிகையிடம் அத்துமீறி பாலியல் தொல்லை செய்ததாக வெப்சீரிஸ் இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் திரைப்படங்கள் மற்றும் சீரியல் உள்ளிட்ட பல்வேறு படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெப்சீரிஸ் இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த இயக்குனர் ரஞ்சித் 3 பேர் என்ற வெப்சீரிசை இயக்கி வந்தார். அதில் கதாநாயகியாக நடித்த நடிகையும், இயக்குநர் ரஞ்சித்தும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கஞ்சி மற்றும் துணை இயக்குனர்கள் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |