பத்திரிக்கையாளர் சுரேஷ் கொண்டேத்தி, நடிகர் சித்துவிடம் கேட்ட கேள்விக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரை உலகின் பிரபலமான பத்திரிக்கையாளர் சுரேஷ் கொண்டேத்தி. இவர் “சந்தோஷம்” என்ற வார இதழை நடத்துகிறார். இவர் நடிகரிடம் கேட்ட கேள்வி அனைவரையும் சங்கடப்படுத்தும் வகையில் அமைந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்தனர். நேற்று முன்தினம் நடந்த “டிஜே டில்லு” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர் சுரேஷ் கலந்து கொண்டார். தெலுங்கு கதாநாயகனான சித்து ஜொன்னாலகடாவிடம், ட்ரெய்லரில் கூறுவதுபோல நிஜத்திலும் நடிகையின் உடம்பில் எத்தனை மச்சங்கள் உள்ளது என கண்டுபிடித்தீர்களா? என்று கேள்வி கேட்டிருந்தார். இது அனைவருக்கும் சங்கோச்சத்தை ஏற்படுத்தியது.
இதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. சுரேஷ் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இவர் பெண்களை மதிக்க தெரியாதவராக உள்ளார் என்ற மனநிலை அனைவரிடையே ஓடிகொண்டுஇருக்கிறது. தற்போது இவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. நடிகை நேஹா செட்டியும் தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். சுரேஷ் பெண்களின் மீது வைத்திருக்கும் மரியாதை இவர் கேட்ட கேள்வியில் இருந்து தெரிகிறது என நேஹா செட்டி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதற்கு அவர், “நான் தவறான அர்த்தத்தில் அந்த கேள்வியை கேட்கவில்லை இந்தப் படம் ஒரு ரொமான்டிக் படம் என்பதால் அந்த முறையில் கேள்வியை கேட்டேன் . என்னை யாரும் அவதூறாக பேச வேண்டாம்” என்று இணையத்தில் பதிவிட்டுள்ளார்.