மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை பிரதியூஷா பாலின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த திரைப்படம் மற்றும் டிவி சீரியல் நடிகை பிரத்யுஷா பால் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்ட ஒருவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்வதாக கடந்த ஓராண்டுக்கு முன் மிரட்டல் விடுத்தார். கடந்த ஓராண்டு காலமாக சமூகவலைதளத்தில் கற்பழிப்பு மிரட்டல் விட்டு வந்த அந்த நபர், சமீபகாலமாக மார்பிங் செய்த புகைப்படத்தை நடிகையின் தாயாருக்கும் அனுப்பியதால் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
Categories