Categories
தேசிய செய்திகள்

நடிகையை கொடூரமாக கொன்ற மகன்…. பின்னணி என்ன?… விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

முன்னாள் இந்தி சீரியல் நடிகை வீனா கபூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது சொத்து தகராறு காரணமாக அவரது மகனான சச்சின் வீனா, கபூரின் தலையில் பேஸ்பால் மட்டையால் தாக்கி இருக்கிறார். இதையடுத்து தாயின் உடலை அருகில் உள்ள ஆற்றில் சச்சின் வீனா தூக்கி வீசி இருக்கிறார். இதற்கிடையில் வீனா கபூர் பல நாட்களாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகனே தன் தாயை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இவ்வாறு பிரபல இந்தி நடிகையான வீனா கபூர் தன் சொந்த மகனால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திரை உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |