Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையை தொடர்ந்து…. சிறையில் கம்பி எண்ணும் காதலன்…!!!

நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் அவருடைய நண்பர் உடன் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் தற்போது மீராமீதுனை சிறையில் அடைத்த நிலையில், மீரா மிதுனின் காதலன் ஷாம் அபிஷேக்கை ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

Categories

Tech |