நடிகை அகல்யா வெங்கடேசன் திருமணம் ஆன புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தனியார் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் நடிகை அகல்யா வெங்கடேசன். இவர் சென்ற 2014ஆம் வருடம் முதல் ஆதித்தியா டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்கள், நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் நடித்து இருக்கின்றார். மேலும் தேவராட்டம், ராட்சசி, ராஜவம்சம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் எடுத்த புகைப்படத்தை இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றும் அருண் குமார் என்பவரை திருமணம் செய்து இருக்கின்றார். வருகின்ற மே 8ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு விழாவானது நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இவரின் ட்விட்டர் பதிவிற்கு பலரும் திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.