Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அஞ்சலிக்கு திருமணமா?… அவரே சொன்ன பதில்…!!!

நடிகை அஞ்சலி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. இதையடுத்து இவர் அங்காடி தெரு படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். நடிகை அஞ்சலி தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Image

இந்நிலையில் நடிகை அஞ்சலி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே பலமுறை அஞ்சலி திருமணம் குறித்த வதந்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது பரவி வரும் இந்த தகவலும் வதந்தி தான் என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் அவர் திரை வாழ்க்கையில்  கவனம் செலுத்தி  நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் இதனால் திருமணம் குறித்து தற்போது யோசிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |