நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் 18 பேஜஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் அனுபமா தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வந்தார்.
నా పేరు నందిని. నాకు మొబైల్లో అక్షరాలను టైప్ చెయ్యడం కన్నా ఇలా కాగితం పై రాయడం ఇష్టం. టైప్ చేసే అక్షరాలకి ఎమోషన్స్ వుండవు ఎవరు టైప్ చేసినా ఒకేలా ఉంటాయి. కానీ రాసే ప్రతి అక్షరానికి ఒక ఫీలింగ్ ఉంటుంది. దాని పై నీ సంతకం ఉంటుంది. నాకెందుకో ఇలా చెప్పడమే బాగుంటుంది. #18PagesFirstLook pic.twitter.com/JE32WXbrdv
— Anupama Parameswaran (@anupamahere) June 1, 2021
தற்போது நடிகை அனுபமா தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்துடன் இணைந்து 18 பேஜஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். பல்நடி சூரிய பிரதாப் இயக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் நிகில் சித்தார்த்தின் பிறந்தநாளான இன்று 18 பேஜஸ் படத்தின் ரொமான்டிக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.