நடிகை அனுஷ்கா தனது சகோதரருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அனுஷ்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் ரஜனி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகை அனுஷ்கா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
You are the best brother any sister can be blessed with😘😘Wishing you the happiest of birthdays bro 🥳😍🥰🤗 pic.twitter.com/2dziYUIIL2
— Anushka Shetty (@MsAnushkaShetty) June 4, 2021
இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.