நடிகை அமலாபால் தெலுங்கில் குடி யடமைத்தே என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா பால் . இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
Excited to announce my next- #KudiYedamaithe & need I say, you're gonna be intriuged?
The thrill begins soon, only on @ahavideoIN. @pawanfilms @ActorRahulVijay @onelifeitiz @RajMadiraju @eshwarrachiraj1 @suryasreenivasp @Raviprakash_Ind @Padminisettam @ipadmini61 @Rajmadiraju pic.twitter.com/0ifteyggxN— Amala Paul ⭐️ (@Amala_ams) June 26, 2021
தற்போது நடிகை அமலாபால் ‘குடி யடமைத்தே’ என்ற தெலுங்கு வெப் சீரிஸில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் பவன் குமார் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார் . இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் அதிரடியான புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.