Categories
சினிமா தமிழ் சினிமா

அட! உண்மை தான் போல…. நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தமிழில் எந்திரன் மற்றும் ராவணன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, நந்தினி கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக சமீப காலமாகவே இணையத்தில் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்திலிருந்து செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியான நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக மற்றொரு புகைபடமும் வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் உள்ள சத்தியம் தியேட்டரில் ஐஸ்வர்யா ராய் சக நடிகர், நடிகைகளுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்துள்ளார். அதன்பின் பட குழுவினர் அனைவரும் போட்டோ எடுத்துள்ளனர்.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆராதியா ஆகியோர் சுகாசினியுடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துள்ளனர். இந்த போட்டோவில் சுகாசினி ஐஸ்வர்யாராயின் வயிற்றில் கை வைத்து இருக்கிறார். அப்போது ஐஸ்வர்யா ராயின் வயிறு சற்று பெரிதாக காணப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் உடல் எடை வேற அதிகரித்து காணப்படுவதால் அவர் கர்ப்பமாகத்தான் இருக்கிறாரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னை பற்றி தகவல் தகவல்களுக்கு கூடிய விரைவில் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |