மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. அதே நேரம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது.
ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது என்றால் என்ன என்பது குறித்து அறியவும் சில ஆண்டுகள் ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அந்தவகையில் அக்னிபாத் திட்டமும், தொழில் வாழ்க்கையை கட்டமைப்பதை விட ஆழமான அர்த்தம் கொண்டது’ என குறிப்பிட்டு உள்ளார். இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.