Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனா ரனாவத், சகோதரி ரங்கோலிக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ் …!!

சமூக ஊடகங்களில் இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலிக்கு மும்பை போலீஸ் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் மும்பை போலீஸ் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இது தொடர்பாக தொடர்ந்து டுவிட்டரில் கங்கனா கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் கங்கனா ரனாவத் இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டு வருவதாக கூறி ஷகீல் அஷ்ரப் அலி என்பவர் மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பாலிவுட்டில் உள்ள இந்து மற்றும் முஸ்லீம் கலைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சான்டில் இருவரும் டுவிட்டர் பதிவிட்டு வருவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும்  FIR பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து கடந்த மாதம் மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகும்படி கங்கனாவுக்கு அவரது சகோதரிக்கும் கடந்த 21-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் வரும் 10-ம் தேதி இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மும்பை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |