தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் தற்போது அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா, நடிகை ஜெயபிரதா ஆகியோர் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நடிகை ஜெயசுதா தென்னிந்திய சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
நடிகை ஜெயபிரதா 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் பட்டுள்ளது. எனக்கு கங்கனா ரணாவத்துக்கு விருது வழங்கியது பற்றி கவலை கிடையாது. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும் 10 படங்களில் நடிப்பதற்குள் அவரை பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இயக்குனர் விஜய் நிர்மலாவுக்கு கூட இது போன்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறினார்.
மேலும் நடிகை ஜெயப்பிரதா என்.டி.ஆர்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நான் எம்பியாக இருந்ததில் இருந்து தற்போது வரை கோரிக்கை விடுத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார். உலகில் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று அங்கீகாரம் பெற்ற விஜய நிர்மலா 2002-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். மேலும் ஜனாதிபதியிடமிருந்து கங்கனா பத்மஸ்ரீ விருதை பெற்றபோது பலரும் விமர்சித்தார்கள். அதோடு கங்கனா பாஜக ஆதரவாளர் என்பதால் தான் அவருக்கு விருந்து வழங்கப்பட்டதாக பலரும் கூறியதாகவும் நடிகை ஜெயப்பிரதா கூறினார்.