Categories
சினிமா

“நடிகை கடத்தல் வழக்கு”…. விசாரணைக்கு மேலும் அவகாசம்…. வெளியான உத்தரவு…..!!!!

கேரள மாநிலத்தில் கடந்த 2017 ஆம் வருடம் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மலையாள முன்னணி நடிகர் திலீப்புக்கும் இக்கடத்தலில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைதானார். இப்போது திலீப் ஜாமீனில் வந்துள்ளார். இந்த நிலையில் விசாரணை அதிகாரியை கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் திலீப் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நடிகை கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பிறகு திலீப்பும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவ்விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிக்கும்படி ஏற்கனவே விசாரணை குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அத்துடன் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் மனு தாக்கல் செய்தது. அதன்பின் நடிகை கடத்தல் வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் முடிக்க அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |