நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் இவர் தளபதி விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார் .
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார் . தற்போது இவர் நடிப்பில் வெளியான பெண்குயின் , மிஸ் இந்தியா ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம கீர்த்தியா இது ? என ஷாக்காகும் அளவிற்கு உள்ளது அந்த புகைப்படம் .