கீர்த்தி சுரேஷ் புதிதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் செல்வராகவனின் சாணிக் காயிதம் படத்திலும், தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா, போலா ஷங்கர் போன்ற படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
Here's a glimpse of my upcoming Malyalam project's pooja – Vaashi, a Revathy Kalamandirr Production. ❤️🙌🏻 #Vaashi pic.twitter.com/kQschf9MI8
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 17, 2021
மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள குட் லக் சகி, அரபிக் கடலின்டே சிம்ஹம் போன்ற படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது கீர்த்தி சுரேஷ் வாஷி என்ற மலையாள படத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்கவுள்ளார் . விஷ்ணு.ஜி.ராகவ் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு கைலாஷ் மேனன் இசையமைக்கிறார். இந்நிலையில் வாஷி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.