உலகிலேயே நடிகை ஒருவருக்கு கோவில் கட்டினார்கள் எனில், அது குஷ்புவுக்கு மட்டும்தான் என்று கூறவேண்டும். அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு உண்டு. இந்நிலையில் நடிகை குஷ்புவின் 52-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 15 வயதில் பாலிவுட்டில் நடிக்க துவங்கிய குஷ்பு, இதுவரையிலும் 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
80, 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம்வந்த அவர் அன்றுபோல் இன்றும் அதே இளமையோடும், சுறுசுறுப்போடும் இருப்பது திரை வட்டாரத்தில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் குஷ்பு சின்னத்திரை, வெள்ளித் திரை, அரசியல், சமூகவலைதளங்கள் என அனைத்திலும் கலக்கி வருகிறார். தற்போது தன் கணவர் சுந்தர்.சி மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை குஷ்புவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். இதனிடையில் #HBDKhushbu என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.