Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி”…. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகாஸ்…!!!!!

நடிகை குஷ்பூ இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது திரைப்படங்கள் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் தமிழில் நடித்து வந்த சீரியல் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் இவர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடிப்பதாக செய்தி வெளிவந்த நிலையில் அவர் அதை மறுத்திருக்கின்றார். இந்த நிலையில் குஷ்பூ இன்று மருத்துவமனையில் அட்மிட்டாகி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சியடைய செய்துள்ளார். குஷ்புக்கு coccyx bone-ல் சர்ஜெரி செய்திருப்பதால் அவர் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓய்வில் இருக்கப் போகின்றாராம்.

Categories

Tech |