Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவின் “யசோதா”…. வெளியான ரிலீஸ் தேதி….. உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

நடிகை சமந்தா நடிப்பில் இப்போது “யசோதா” எனும் பான் இந்தியா படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகின்றனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்துக்காக சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இருமொழிகளிலும் தனக்காக டப்பிங் பேசி இருக்கிறார். திரில்லர் வகை கதை அம்சம் உடைய இத்திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ தேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். அத்துடன் எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

அதன்பின் மார்த்தாண்டா கே.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. கர்ப்பிணி பெண்ணாக உள்ள சமந்தாவுக்கு வரும் இன்னல்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை கதைக்கருவாக வைத்து உருவாகி இருக்கும் “யசோதா” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் யசோதா படம் வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Categories

Tech |