நடிகை சஹானா உயிர் இழந்ததற்கான காரணம் பற்றி சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 21-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார்.
இதையடுத்து போலீஸார் சஹானாவின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாததால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். இதையடுத்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுவதால் கணவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
சஹானாவின் கணவரான சஜ்ஜாத் அடிக்கடி குடித்துவிட்டு சஹானாவிடம் பிரச்சனை செய்ததாகவும் அவரை கொடுமை செய்ததாகவும் சஹானாவின் அம்மா கூறியுள்ளார். சஹானா மலையாள விளம்பரப் படங்கள், தமிழ் விளம்பரப் படங்களில் நடித்திருக்கின்றார். இதனால் இவருக்கு மூன்று மலையாள பட வாய்ப்புகள் வந்து இருக்கின்றது. இத்திரைப்படத்தில் சகானா நடித்ததற்காக அவருக்கு செக் வந்ததையடுத்து யாருடைய கணக்கில் டெபாசிட் செய்வது என கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை தெரிவித்து வருகிறது. இதுபோலவே சஹானா சஜ்ஜாத் இடையே மே 12-ஆம் தேதியும் தகராறு ஏற்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. சஹானாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே அவரின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.