மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் வருடம் வெளியாகிய “பிரேமம்” திரைப்படம் வாயிலாக மலர் டீச்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய்பல்லவி. இதையடுத்து மலையாளத்திலேயே “களி” என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதன்பின் பிடா என்ற தெலுங்கு படத்தின் வாயிலாக தெலுங்குக்கு சென்ற சாய்பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான தியா திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார்.
அண்மையில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகிய ஷியாம் சிங்காராய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் நடிப்பில் விராட பர்வம் படம் நீண்ட இடைவேளைக்கு பின் வெளியாகியது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இந்தபடத்தில் சாய்பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரொமோஷனுக்காக நடந்த நேர்காணலின்போது சாய்பல்லவி பேசியது சர்ச்சைக்குஉள்ளானது. இதனிடையில் இவரின் கருத்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் பெற்று வருகிறது. இத்திரைப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் “விராட பர்வம்” படம் பற்றி தன்னுடைய கருத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில் “அண்மையில் நான்பார்த்த சிறந்த தெலுங்கு திரைப்படம் “விரத பர்வம்” ஆகும். இயக்குனர் வேணு உடுகுலா, எந்த சமரசமும் இன்றி இப்படத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர். இக்கதாபாத்திரத்தை ஏற்றுநடித்த ராணா டகுபதிக்கு எனது சிறப்பு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் சாய்பல்லவியும் சிறப்பாக நடித்திருக்கிறார்” என அவர் பதிவிட்டுள்ளார்.
#Viraataparvam is the best Telugu film I've watched in recent times. Producers & dir @venuudugulafilm deserve much appreciation for making this film without any compromises.Special appreciations to @RanaDaggubati for accepting &doing this role & @Sai_Pallavi92 has done superbly👏
— pa.ranjith (@beemji) June 19, 2022