நடிகை சாய் பல்லவி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கார்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை பிளாக் ஜெனி புரொடக்ஷன்ஸ் மற்றும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் தமிழ் வெளியிட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது.
கடந்த ஜூலை 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கார்கி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கார்கி படத்தின் ஓடிடி வெளியிட்டு உரிமையை சோனி லைவ் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓடிடி தளத்தில் கார்கி படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.