மலையாளத் திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த சாய் பல்லவி தற்போது பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும் ஹீரோக்களுக்கு சமமாக ஆந்திராவில் சாய் பல்லவிக்கு மன்றங்கள் திறக்க ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது உச்சத்தில் இருக்கும் சாய்பல்லவி முதலில் தெலுங்கில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு பல முன்னணி நடிகைகள் கமெண்ட் கூறினர். ஆனால் இன்று அந்த நடிகைகளை எல்லாம் விட சாய் பல்லவி தான் உச்சத்தில் இருக்கிறார். அதிலும் நடிகை சமந்தாவே ஒரு முறை ரியாலிட்டி ஷோவில் சாய் பல்லவி நடனம் ஆடியதை நேரில் கண்டு ரசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாய் பல்லவியின் கால்ஷீட்டுக்காக ஒட்டு மொத்த தெலுங்கு திரையுலகமும் காத்துக்கொண்டிருக்கிறது. இதுதான் அசுர வளர்ச்சி.