Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சாய் பல்லவி படத்தின் டிரைலர்…. முன்னணி பிரபலங்கள் வெளியீடு…. யாரெல்லாம் தெரியுமா….?

பிரபல நடிகை சாய் பல்லவி படத்தின் ட்ரெய்லரை பிரபல ஹீரோக்கள் வெளியிட்டுள்ளனர்.

மலையாள சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இவர் நடித்த மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் சமீபத்தில் நானியுடன் சேர்ந்து நடித்த ஷியாம் சிங்காராய் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கார்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என 3 மொழிகளில் ரிலீசாகிறது. இந்த படத்தை தமிழில் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையி,ல் கார்கி படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இந்த ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |