நடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி பலரும் பார்க்காத அரிய புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளில் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டி தலை சிறந்த நடிகையாக வலம் வந்தவர் சாவித்திரி. ரசிகர்களால் கொண்டாடப்படும் பேரழகியாக திகழ்ந்தவர் அவர். நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்துகொண்ட சாவித்திரி இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். மகன் மகள் என அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது.
இந்நிலையில் குழந்தைகள் இருக்கும் போது ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி எடுத்து கொண்ட அரிய புகைப்படங்கள் சாவித்திரியின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியால் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
ஜெமினி கணேசன் சாவித்திரியின் மகன் சதீஷ் குழந்தையாக இருந்தபோது பெற்றோர் கையில் வைத்திருக்க அருகே சமத்து பெண்ணாக விஜய சாமுண்டீஸ்வரி தம்பியை ரசித்தபடி நிற்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த படங்கள் யாவும் தீயாய் பரவி வருகின்றது.