சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டலில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு அனைவரிடத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள். அதில் அவரது கணவர் மீது சந்தேகம் கொண்டு நடத்திய விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நடிகை சித்தாரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 13 சாட்சிகள் மறு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமின் மனு மீதான விசாரணை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.