நடிகை சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகா அஜித், விஜய், கமல் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இதையடுத்து இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2020 ஜனவரி மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
மேலும் இந்த வருடம் ஜனவரி மாதம் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சினேகா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை சினேகா தனது மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சினேகாவின் மகள் நன்றாக வளர்ந்து விட்டதாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகை சினேகா பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.