நடிகை அபர்ணா ‘சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்து அளித்த பேட்டியில் நடிகை ஜோதிகாவின் பாராட்டு மறக்க முடியாதது என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மையம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப்’ போற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , சூரரைப் போற்று திரைப்படம் வேறு மாதிரியான அனுபவத்தை கொடுத்தது. எனக்கும் இயக்குனர் சுதா மேடமுக்கும் இடையேயான புரிதல் சிறப்பாக இருந்தது. அவர் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை சவால்களை சந்தித்து விட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
‘இறுதிச் சுற்று’ படம் பார்த்ததிலிருந்து சுதா மேடத்தை ரொம்ப பிடிக்கும். நடிகர் சூர்யா மாதிரி முன்னணி கதாநாயகனுடன் சமமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இரண்டு பேருக்கும் சமமான உணர்வுகள், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட கதாபாத்திரம் அது. நடிகர் சூர்யா சார் படம் முழுக்க என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார். படத்தின் போட்டோ ஷூட் பார்த்துவிட்டு நடிகை ஜோதிகா மேடம் என்னை பாராட்டுனாங்க. அது மறக்க முடியாத பாராட்டு என்று கூறியுள்ளார்.