நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்தின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘பிங்க்’ படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார் .
Kahani Aashiqana. Raaz Katilana.#HaseenDillruba coming soon. Only on Netflix. #TheUltimateKaunspiracy pic.twitter.com/fMGgM8J1K1
— taapsee pannu (@taapsee) June 3, 2021
தற்போது நடிகை டாப்ஸி இயக்குனர் விணில் மேத்யூ இயக்கத்தில் ஹஸீன் தில்ரூபா என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அமிட் டிரிவெதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஹஸீன் தில்ரூபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 2-ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸில் இந்த படம் வெளியாக உள்ளது.